Posted in Verse Explanation

மேன்மைப்பாராட்டுதல்

மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.

2 கொரிந்தியர் 10:17

உலகத்தில் தேவனுடைய மகிமைக்காக படைக்கப்பட்ட நாம், எக்காரணத்திற்காகவும் நம்மை நாம் மேன்மைபாராட்டாதப்படிக்கு நம்மை உண்டாக்கி, நம்மை பராமரிக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தரை குறித்தே மேன்மை பாராட்ட வேண்டும். கர்த்தரை நாம் எவ்வாறு மேன்மை பாராட்டலாம்?

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்” என்று எரேமியா 9:24ல் சொல்லப்பட்டுள்ளது.

கர்த்தருடைய கிருபையையும், அவருடைய நியாயத்தையும், அவருடைய நீதியையும் குறித்தே நாம் மேன்மைபாராட்டவேண்டும்.

கர்த்தருடைய கிருபை

கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று பலமுறை சங்கீதக்காரன் பாட வாசிக்கிறோம். அவருடைய கிருபை மேலானது. அது நம்மை காப்பாற்றுகிற கிருபை. ஆதியாகமம் 6:8ல் நாம் வாசிக்கிறபடி “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது”. உலகம் பாவத்தினால் பெருகி அதை ஜலப்பிரவாகத்தினால் தேவன் அழிக்க திட்டமிட்டபொழுது, நோவாவுக்கு கர்த்தரின் கண்களில் கிருபை கிடைத்தது. அதனால் உலகமே தண்ணீரினால் அழிந்தாலும் அவனும் அவன் வீட்டாரும் காப்பற்றப்பட்டனர்.

அதேபோல், லூக்கா 1:28ல் “கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று தேவதூதன் மரியாளுக்கு கிடைத்த கிருபையை கூறுகிறான். நோவாவிற்கு கிருபையளித்த அதே ஆண்டவர், மரியாளுக்கும் அளிக்கிறார். கிருபையை பெற்ற மரியாள், உலகத்தையே பாவத்திலிருந்து இரட்சித்து காப்பற்றும் இயேசுவை பெற்றெடுக்கும் ஒரு மாபெரும் சிலாக்கியத்தை பெருகிறாள்.

தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது” என்று ரோமர் 5:15ல் சொல்லியப்படி உலகத்திலே அநேகருக்கு கிருபையளிக்கும் அந்த தேவனை குறித்தே மேன்மைப்பாராட்டவேண்டும்.

கர்த்தருடைய நியாயம்

கர்த்தருடைய நியாயம் என்பது மனிதனுடைய நியாயத்திற்கும் மேலானது. மத்தேயு 20ல் இயேசு வெவ்வேறு நேரத்தில் வேலைக்கு அழைக்கப்பட்டு அவர்கள் எல்லோருக்கும் ஒரே கூலியை கொடுக்கும் ஒரு உவமையை பார்க்கிறோம். இதினாலே முந்தி வந்தவர்கள் ஆண்டவரிடம் முறுமுறுத்தார்கள். ஆனால் அவரோ, “சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை” என்று கூறுகிறார். மனுஷனுடைய பார்வையில் இது அநியாயமாகவே தோன்றும். ஆனால் தேவனுடைய பார்வையில் அது நியாயமானது. அவர் தயாளன்.

இயேசு பூமியில் எல்லாவற்றையும் உவமைகளினாலே பேசினார். அவைகள் எல்லாவற்றிலும் ஒரு மறைப்பொருள் இருக்கும். அதன்படி 16வது வசனத்தை வாசிக்கையில் இந்த உவமை தேவனுடைய இராஜ்ஜியத்தை பற்றியதாகும் என்பது புரியவரும். மனுஷன் எப்பொழுது தெரிந்துக்கொள்ளப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பரலோகத்திலே ஓர் இடம் என்னும் ஒரே மேன்மையை தேவன் தருகிறார்.

பவுல் இயேசுவின் நிமித்தம் அநேக பாடுகள் பட்டு அவருக்காக ஊழியம் செய்ததிநிமித்தம் அவனுக்கு கிடைக்கும் அதே பலனை இயேசு சிலுவையில் அறையப்பட்ட சூழ்நிலையில், மனம் மாறி வேண்டுதல் செய்த குற்றவாளி ஒருவனுக்கும் தருகிறார். அவர் அவனை பார்த்து “இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். அந்த குற்றவாளி கடைசி நிமிடத்தில் தான் இரட்சிக்கப்பட்டான் ஆனால் தேவனோ அவனுக்கும் பவுலுக்கும் ஒரே மேன்மையைத தருகிறார். அவர் தயாளன்.

கர்த்தருடைய நீதி

கர்த்தருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். 2 சாமுவேல் 13ம் அதிகாரத்தில் தாவீது பத்சேபாளிடம் தவறான முறையில் நடந்ததன் விளைவாக அவன் நியாயபிரமாணங்களை மீறுகிறதை பார்க்கிறோம். அவன் பிறர் தாரத்தை விரும்புகிறான், தவறான நடவடிக்கையில் ஈடுபடுகிறான், மேலும் புருஷனான உரியாவை கொலை செய்கிறான். இந்த தவறுகளுக்கெல்லாம் தேவன் மோசேயின் மூலமாக கொடுத்த கட்டளையின்படி தாவீது கொலை செய்யப்படவேண்டும். ஆனால் கர்த்தரோவென்றால், நாத்தான் தீர்க்கதரிசி மூலமாக “நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” என்று கூறி மன்னிக்கிறார்.

இதற்கு காரணம், தாவீதினுடைய செயல். 1 யோவான் 1:9ல் “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என்ற வாக்கின்படி, தாவீது “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்” என்று பாவ அறிக்கை செய்கிறான். தேவன் உடனே மன்னித்து அவன் மீது இருந்த அநியாயத்தை நீக்கி அவனை சுத்திகரித்து அவருடைய உண்மையையும் நீதியையும் விளங்கப்பண்ணினார். இது அவருடைய நீதி.

இத்தகைய கர்த்தருடைய கிருபை, அவருடைய நியாயம், அவருடைய நீதியை குறித்தே நாம் மேன்மைபாராட்டவேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s