Posted in Verse Explanation

சந்தோஷம்

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள்
பிலிப்பியர் 4:4

நாம் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே நம்மை சுற்றியிருக்கும் சூழலும் அமையும். நாம் சந்தோஷமாயிருக்கும்பொழுது, நம்மை சுற்றியிருக்கும் சூழலும் சந்தோஷமாகவே இருக்கும். அது மட்டுமல்ல, நாம் சந்தோஷமாயிருந்தால் நமது உடலும் ஆரோக்கியமுள்ளதாய் இருக்கும். ஆகவே தான் நம்மிடம் தேவன் எதிர்பார்க்கும் ஆவியின் கனிகளில் அன்பிற்கு பின்னால் சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

(ஆங்கில பதிப்பிற்கு – For English Version)

ஆங்கிலத்தில் சந்தோஷத்தை, ஜாய் (Joy) என்று மொழிபெயர்த்துள்ளார்கள். இந்த சந்தோஷம் ஒரு உலகக்காரியத்தினால் வரும் சந்தோஷமல்ல, தேவனோடு இணைந்திருக்கும்பொழுது, தேவன் நமக்களிக்கும் ஒரு இன்பமான சூழ்நிலையாகும். இப்படிப்பட்ட சந்தோஷம் தற்காலியமானதல்ல, நிரந்தரமானது. ஆகவே தான் எப்பொழுது நாம் சந்தோஷமாயிருக்கவேண்டும் என்கிறார்.

இப்பொழுதும் ஏதோவொரு துக்கத்தில் நீங்கள் இருப்பதாக உணர்கிறீர்களா? நாம் துக்கமுகமாக இருப்பதை தேவன் ஒருபோதும் விரும்புகிறதில்லை. ஆகவே தான் தேவன் சொல்கிறார், “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்” (யோவான் 16:20) என்று. அவரை நாம் விசுவாசித்து, அவருக்கு செவிசாய்த்து, அவரது விருப்பத்தின்படி செய்யும்பொழுது நமது துக்கங்களை எல்லாம் நீக்கி கட்டாயம் சந்தோஷமளிக்கிறவராகவே இருக்கிறார். இந்த வசனங்களை நாம் நமது நாவினால் அறிக்கை செய்து அந்த தெய்வீக சந்தோஷத்தை நாமும் பெற்றுக்கொள்வோம்!

Advertisements

One thought on “சந்தோஷம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s