Posted in Verse Explanation

சமாதானம்

சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்.
1 பேதுரு 3:11

நாம் வாழும் இந்த உலகம் சமாதானமற்ற, அன்பில் குறைவுப்பட்டதாய் இருந்தாலும், தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது, நாம் எல்லாரிடமும் சமாதானமாக இருக்கவேண்டும் என்பதே. ஏன் இவ்வாறு நம்மிடத்தில் தேவன் எதிர்பார்க்கிறார்? காரணம் அவர் “சமாதான பிரபு (ஏசாயா 9:6).

(ஆங்கில பதிப்பிற்கு – For English Version)

மற்றவர்களினால் வருகிற சமாதான குறைச்சல்

கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். -ரோமர் 12:18

இப்பொழுதும், வேலை செய்கிற இடத்தில் உங்களுக்கு ஒரு சமாதானமில்லையா? அல்லது வீட்டில் ஒரு சமாதானமான சூழ்நிலை இல்லையா? சற்றே யோசித்து பார்த்தால், இதற்கு பல காரணங்கள் இருக்கும்.

நாம் விரும்பாத காரியத்தை நம்மை நன்கு அறிந்து, நமக்கு நெருங்கினவர்களே செய்திருக்கலாம்; நாம் மற்றவர்களுக்கு நன்மையே செய்த போதும், நம்மை புரிந்துக் கொள்ளாமல் நமக்கு விரோதமாக செயல்ப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த சமயத்தில் நாம் நினைவினில் கொள்ளவேண்டியது, நம்மை இரட்சிக்க வந்த இயேசுவையும் இந்த உலகம் அவ்வாறே செய்தது.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் நன்மையன்றி ஒரு தீமையும் செய்யவில்லை. வியாதியஸ்தர்களுக்கு சுகமும், பார்வையற்றவர்களுக்கு பார்வையையும், பிசாசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையும் என அநேகருக்கு நன்மையையே செய்தார். ஆனால் அந்த நன்மையை பெற்ற மக்களே அவரை கலகக்காரர் என்று குற்றப்படுத்தி சிலுவையிலே அறைய ஒப்புக்கொடுத்தார்கள். கூடவே இருந்து அவர் செய்த நன்மைகளை பார்த்தவனும், அந்த நன்மைகளை அனுபவித்தவனும் அவரை காட்டிக்கொடுத்தான். அந்த சூழ்நிலையில், அவருடைய மனம் எவ்வளவாய் பாடுப்பட்டிருக்கும். சமாதானத்தை முற்றிலுமாக இழந்து, காயங்கள் பட்டு, அவமானப்பட்டு பாதிக்கப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட துன்பம் ஏதும் நமக்கு வரவில்லையே! நாம் சந்தோஷமாய் இருப்போமாக.

எந்த சூழ்நிலையிலும் சமாதானத்தை இழக்காதிருத்தல்

தகுதியே இல்லாதவர்களுக்கு கிடைக்கும் சில நன்மைகள், பதவி உயர்வுகள், பண வசதிகள் நமக்கு கிடைக்கவில்லையே என்று சமாதானம் இழந்து, உள்ளம் வாட்டுகிறதா? நமக்கு ஏற்றக்காலத்தில் கிடைக்கவேண்டியதை கர்த்தர் நமக்கு திட்டம் பண்ணிவைத்திருக்கிறார். அதை நாம் பெறும் வரை பொறுமையோடு காத்திருப்போம்.

நம்மை ஒருபோதும் மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து ஏங்காமல், தேவன் நமக்கு இன்றைய தினத்தின் தேவைகளை சந்திக்கிறார் என்று சொல்லி அவரை துதிப்போம். (I தெசலோனிக்கேயர் 5:18)

நமக்கு துரோகம் செய்கிறவர்களை நாம் மன்னிபோம். தேவனும் அப்படியே சொல்கிறார். உன் எதிரியை நேசி என்றும், அவனுக்காக ஜெபம் பண்ணு (மத்தேயு 5:44) என்றும் கூறுகிறார். பழிவாங்கும் குணத்தை நாம் விடுத்து நமக்கு எதிராக எழும்பினவர்களை மன்னிப்போம். ஏனெனில் தேவன், “பழிவாங்குதல் எனக்குரியது” (ரோமர் 12:19) என்று கூறியிருக்கிறார்.

நம்மை நாம் எப்படி நேசிக்கிறோமோ அதுப்போல மற்றவர்களையும் நாம் நேசிப்போம் (மத்தேயு 22:39). விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்வோம். யாவரோடும் சமாதானமாயிருப்பதையே நாடுவோம் (எபிரேயர் 12:14). அப்பொழுது சமாதானத்தின் தேவன் தாமே நமக்கு சமாதானத்தை தந்து நடத்துவார்.

நம்முடைய குணத்தினால் வருகிற சமாதான குறைச்சல்

மற்றவர்களினால் எப்படி நமக்கு சமாதானக் குறைவு வருகிறதோ அதேப்போல நம்முடைய சில குணாதிசயங்களினாலும் சமாதானக் குறைவு வருகிறது. அதில் முக்கியமானது எதிர்பார்ப்பு. நாம் ஒரு காரியத்தை எதிர்பார்த்து அது நடவாமல் போகும் சமயத்தில் ஏமாற்றம் அடைகிறோம். அதையே சிந்தித்து சிந்தித்து நமது மனமும் சோர்ந்துபோகிறது. ஒரு சமாதனமற்ற சூழலை நாமே உருவாக்கிக்கொள்கிறோம்.

தேவனையே அண்டிக்கொண்டிருக்கும்பொழுது, நாம் ஒரு காரியத்தை எதிர்பார்த்து நடக்கவில்லையெனில் அது தேவனுக்கு பிரியமில்லாததாக இருக்கலாம், அல்லது அது தற்சமயம் நமக்கு தேவையில்லை என்று தேவன் தடுத்திருக்கலாம், அல்லது அது நமது பார்வையில் நலமானதாக தேன்ற, நம்முடைய வாழ்க்கைக்கு அது தேவையில்லாததாக இருக்கக்கூடும், அல்லது அது நமக்கு கண்ணியாக இருக்கக்கூடும்.

நாம் எந்த ஒரு காரியத்தின் மேலும் அதிக எதிர்பார்ப்பு வைக்காமல், நமக்கு நன்மையாக தேன்றுகிற காரியங்களை, தேவனிடத்தில் சொல்லிவிட்டு அதனை பற்றி அதிகமாய் நினையாமல், நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும், கவலைப்படாமல் இருத்தல் நமக்கு ஏற்புடையதாக இருக்கும்.

மேலும், எதிர்ப்பார்த்த காரியம் நடவாதது நமக்கு சமாதானக் குறைவை கொண்டு வருவதுப்போல, எதிர்பாராமல் நமக்கு நடக்கும் காரியங்களும் சில வேளைகளில் சமாதான குறைச்சலை ஏற்படுத்தும். நமக்கு சாதகமாய் தோன்றும் காரியம் நாம் எதிர்பாராமல் நடக்கும்பொழுது நாம் எப்படி தேவனுக்கு நன்றி சொல்கிறோமோ, அப்படியே நமக்கு சாதகமில்லாத காரியம் நாம் எதிர்பாராமல் நடக்கும்பொழுதும் நன்றி சொல்லவேண்டும். தேவன் நமக்கு நன்மையானதை தவிற தீமையானதை ஒருப்போதும் அனுமதிப்பதில்லை.

நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். -பிலிப்பியர் 4:6-7

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். -நீதிமொழிகள் 16:7

கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். -சங்கீதம் 29:11

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. -யோவான் 14:27

இந்த வசனங்களை ஆராய்ந்து தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் ஆவியின் கனிகளில் மூன்றாம் கனியான சமாதானத்தை அடைவோம் அதை செயல்களில் வெளிப்படுத்துவோம்.

Advertisements

One thought on “சமாதானம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s