Posted in Verse Explanation

தயவு

நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை
நீதிமொழிகள் 19:22

மற்றவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பது தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கனி. இயேசு இந்த உலகத்தில் மனிதனாக மனிதனோடு வாழ்ந்தபோது அவர் நன்மை செய்பவராகவே சுற்றித்திரிந்தார் என்பதாக வேதத்தில் வாசிக்கிறோம். அவர் தம்மை நேசித்தவர்களுக்கு மாத்திரமல்ல, கடைசி நிமிடத்தில் தன்னை பிடிக்கவந்த போர்சேவகனுடைய காதை பேதுரு வெட்டினபோதும், அந்த போர்சேவகனுக்கு அற்புத சுகத்தை தந்தார்; இழந்த காதை திரும்பவும் இணைத்தார். அதுபோலவே, நாமும் மற்றவர்களுக்கு மனதார நன்மை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்; அதனையே தயை என்கிறார்.

(ஆங்கில பதிப்பிற்கு – For English Version)

பலன் எதிர்பாராமல் செய்யும் நன்மை

அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக
பிலிப்பியர் 2:4

தயவு – பிறரிடத்தில் காட்டும் அன்பும் இரக்கமும் ஆகும்.
தயவு – பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு செய்யும் நற்செயலாகும்.
இதனையே இந்த வசனம் உணர்த்துகிறது. மற்றவர்களுக்கு ஒரு நன்மை செய்வதால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது, அவர்களால் எனக்கு என்ன லாபம் என்றெல்லாம் எண்ணாமல், ஒருவருக்கு செய்யும் எதிர்பாரா நன்மை தயை என்னும் கனியாகும்.

யாரேனும் வயதானவர் சாலையை கடப்பதற்கு சிரமப்படும்போது அவர்களை கடக்க உதவிசெய்வதும் ஒரு தயை தான். அல்லது தூக்கமுடியாமல் ஏதேனும் பாரத்துடன் யாரேனும் நாம் செல்லும் அதே பாதையில் சென்றுக்கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு கைக்கொடுப்பதும் தயையேயாகும். அவர்களிடமிருந்து நமக்கு பாசமான நன்றி என்ற வார்த்தையும், மனதில் ஒரு சந்தோஷமும் கிடைக்கும்.

நாம் சந்திக்கும் ஏதேனும் ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு வாங்கிக்கொடுப்பதும், நோயுற்றவர்களையும் கைவிடப்பட்டவர்களையும் சந்தித்து தேவனுடைய அன்பை சொல்லி, ஒரு நேரம் அவர்களோடு பொழுதை கடத்துவதும், காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடமும், முதியவர்களிடமும் நம்மால் ஆனதை பகிர்ந்துக்கொள்வதும் தயையே. இவைகளையெல்லாம் செய்வதால் நமக்கு ஒரு லாபமும் கிடைக்கப்போவதில்லை, இவர்களிடமிருந்தெல்லாம் நாம் எதையும் எதிர்பார்க்கவும் முடியாது, கிடைப்பதெல்லாம் ஒரு சந்தோஷமும் நிம்மதியுமே!

சுய நலம் கருதாமல் செய்யும் நன்மை

யோய்தாவினுடைய செயலை நாம் 2 நாளாகமம் 22,23ல் வாசிக்கிறோம். அத்தாலியாள் இராஜ குமாரர்களையெல்லாம் கொன்றுப்போட்டு தேவனுடைய பார்வையில் பொல்லாப்பானதை செய்துக்கொண்டிருந்தபோது, யோய்தா தன்னை பாராமல், தேசத்தின் நலனுக்காக, தன்னை அற்பணித்து துணிவுடன் யோவாசை களவாயெடுத்துவந்து வளர்த்து, தேசத்தின் இராஜாவாக அவனை உட்கார வைத்தான். இதனால் அவனுக்கு எந்த நலனும் இல்லை, ஆயினும் தேசத்தின் நலனுக்காக துணிவுடன் இக்காரியத்தில் இரங்கினான். தான் செய்யும் செயலை அத்தாலியாள் அறிந்திருந்தால், இவனுக்கு கட்டயம் மரணம் சம்பவித்திருக்கும், ஆனால் யோய்தா அதை பார்க்கவில்லை. இதுவும் ஒரு வகை தயையே.

நாம் அநேக நேரங்களில் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிவிடுகிறோம். கண்ணெதிரே பேருந்திலோ அல்லது பக்கத்து வீட்டிலோ திருட்டு சம்பவம் நடப்பதை கண்டும், காணாமல் செல்வதுண்டு. எங்கே கூச்சலிட்டால், நமக்கு பாதகம் வந்துவிடுமோ என்கிற பயம்; எங்கே காவலர்கள் நம்மை அலையவைத்துவிடுவார்கள் என்கிற பயம். இப்படிப்பட்ட சமயங்களில், தேவனிடத்தில் காரியத்தை ஒப்புவித்து துணிந்து நாம் செயல்படுவோமானால், நமக்கு பாதகமின்றி தேவன் பாதுகாப்பார்; மற்றவர்களுக்கு நேரும் துயரத்திலிருந்தும் அவர்களை காப்பாற்றிவிடலாம்.

கடைசிக்காலத்தில் அன்பு தனிந்து சுத்தாமாக இல்லாமல் போய்கொண்டிருக்கிறது. சமீப காலமாக, நெரிசலான சாலையில் அனைவருக்கும் முன்பாக ஒருவனை(ளை) கொலைப்பண்ணுவதை கண்டும், வேடிக்கைப்பார்க்கும் நபர்கள் பெருகிவிட்டார்கள். ஒருவரும் தடுப்பதற்கு முன் வருகிறதில்லை. ஆனால் தேவன் நம்மிடம் தயை என்னும் கனியை எதிர்ப்பார்க்கிறார்.

நாம் எந்த அளவிற்கு மற்றவர்களிடத்தில் தயவு காட்டுகிறமோ அந்த அளவிற்கு தேவனும் நம்மிடத்தில் தயவாக இருப்பார். தயை செய்வோம், தயை பெறுவோம்!

Advertisements

One thought on “தயவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s