Posted in Verse Explanation

தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற்றுக்கொள்ளுதல்

எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன்
யாத்திராகமம் 33:19

இந்த வசனத்தை வாசித்ததும் நமக்கு தேவன் பட்சபாதமுள்ளவரோ என்று தோன்றும். ஆம், அப்படி தானே தேவன் சொல்கிறார், “எனக்கு விருப்பமாயிருப்பவனிடம் இரக்கமாகவும், தயவாகவும் இருப்பேன்” என்பதாக! ஆனால் அப்போஸ்தலர் நடபடிகளில் (10:34) வாசிக்கும்போது, பேதுரு சொல்கிறார், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்று.

மேலோட்டமாக வாசித்தால் இது முரண்பாடாக தோன்றும். ஆகவே தான் இப்படிப்பட்ட வசனங்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், கேட்டால் வெளிப்படுத்தவும் செய்கிறார்.

இரக்கம்

மத்தேயு 5:7 ல் இயேசு மலைமேல் ஏறி திறளான ஜனங்களுக்கு உபதேசிக்கும்பொழுது, “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.” என்பதாக கூறுகிறார். நாம் எந்த அளவிற்கு மற்றவர்களிடத்தில் இரக்கமாக இருப்போமோ, அந்த அளவிற்கு தேவனும் நம்மீது இரக்கமாயிருப்பார். ஆம் இரக்கமுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டப்படுகிறது!

கிருபை

1 பேதுரு 5:5 ல், “தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என்பதாக பேதுரு கூறுகிறார். தாழ்மையை குறித்து வேதத்தில் நாம் அதிக இடங்களில் வாசிக்கிறோம். இயேசு நமக்கு முன்மாதிரியாக தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த உலகத்தையே இரட்சிக்க வந்த அவர், ஒரு அரசனுடைய வீட்டிலோ அல்லது மாளிகையிலோ பிறக்கவில்லை; மாறாக, சத்திரத்தில் கூட இடமில்லாமல் மாட்டு தொழுவத்தில் பிறந்தார். இறுதியாக, இராப்போஜனத்திற்கு முன் சீஷர்களுடைய கால்களை கழுவி தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்தினார். அகில உலகத்தையே படைத்து காத்து வரும் இயேசு தம்மை தாழ்மையின் ரூபமெடுத்தபோது, மண்ணான மனுஷனான நாம், அற்ப ஜீவனான நாம் தாழ்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்கிறார். அப்பொழுது நமக்கு தேவன் கிருபை அளிப்பார்.

மற்றவர்களுக்கு இரங்கி, தாழ்மையுள்ளவர்காளாய் இருப்போமானால் கட்டாயம் தேவனுக்கு சித்தமுள்ளவர்களாகவும், அவருக்கு பிரியமுள்ளவர்களாகவும் இருப்போம்; நம்மேல் தேவனும் கிருபையுள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருப்பார்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s