Posted in Verse Explanation

தேவனிடத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்கள்

சங்கீதம் 115:13ல் நாம் இப்படியாக வாசிக்கிறோம்:

கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்

கர்த்தருக்கு பயப்படுதல் என்றால், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து, அவருடைய கற்பனைகளின் படி நடப்பதே ஆகும். தேவனுக்கு பயப்படும் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பார் என்பதாக இந்த வசனம் கூறுகிறது. எப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை தேவன் நமக்கு தருகிறார்?

வழியை போதிப்பார்

உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு குழப்பம் உண்டு. படித்துக்கொண்டிருக்கும் சிறியவர்களுக்கு அடுத்து எந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும் என்கிற குழப்பம். வாழ்க்கையை நடத்தி வரும் பெரியவர்களுக்கு  தங்களுடைய அடுத்தக்கட்ட வேலைக்காக தேர்ந்தெடுப்பதிலே ஒரு குழப்பம்.

ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் வழிகளிலே சிறந்த வழியை தேர்ந்தெடுப்பதிலே குழப்பங்கள் வரத்தான் செய்கிறது. அந்த குழப்பமான சமயத்தில் நாம் அநேகருடைய ஆலோசனைகளை நாடி செல்கிறோம். சில வேளை ஆலோசித்து தேர்ந்தெடுக்கும் வழி சரியானதாகவும், சில வேளை தவறுதலாகவும் முடிகிறது. அதின் நிமித்தம் துன்பத்தை அனுபவிக்கும் நபர்களில் நம்மில் பலருண்டு.

இப்படிப்பட்ட நமக்கு தேவன் சொல்கிறார்,

கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார் – சங்கீதம் 25:12

குழப்பத்திலுள்ள நமக்கு, நம்முடைய கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், வருங்காலத்தையும் அறிந்தவரிடத்திலிருந்து சரியான வழியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை அளிப்பது என்பது ஒரு ஆசீர்வாதமே. இதற்கு தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்ப்பது, அவருக்கு பயப்படுதல் மட்டுமே!

ஐசுவரியத்தை தருவார்

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும் – நீதிமொழிகள் 10:22

உலகத்திலுள்ள ஒவ்வொருக்கும் தேவை ஐசுவரியம். தேவனுக்கு பயந்து நடப்பவர்களுக்கு தேவன் தரும் ஆசீர்வாதம் ஐசுவரியம். ஒரு குறைவின்றி நம்மை நடத்த அவர் வல்லவராயிருக்கிறார். நாம் ஐசுவரியவான்கள் ஆகவேண்டும் என்பதற்காக, அவர் தரித்திரரானார் (2 கொரிந்தியர் 8:9). நம்மை ஒரு போதும் தரித்திர நிலமைக்கு தள்ளாத தேவன் அவர்.

இந்த உலகத்திலே வாழும் நமக்கு தேவை வழிநடத்துதலும் ஐசுவரியமுமே. இவை இரண்டையும் தேவன் நமக்கு இலவசமாக அளிக்கிறார். அவருடைய கட்டளைகளின்படி நடந்து தேவன் தரும் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s