Posted in Verse Explanation

நற்குணம்

நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும்…
ரோமர் 15:14

நம்மிடம் தேவன் எதிர்பார்க்கும் மேலுமொரு கனி நற்குணம் ஆகும். நாம் வாழும் இந்த உலகம் தீமையினாலும், வஞ்சகங்களினாலும் சூழப்பட்டது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் தீமையை கற்றுக்கொடுக்க தேவையே இல்லை, அது தானாக வந்து விடுகிறது. ஆனால் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் நல்ல குணமோ அதிகமாக சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது.

“நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்” என்று III யோவான் 1:11 ல் வாசிக்கிறோம். தேவனால் உண்டாக்கப்பட்ட நாம், அவருடைய சாயலில் படைக்கப்பட்ட நாம், நன்மையை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். அதை பின்பற்றும்படி விரும்புகிறார். நாம் வாழும் உலகம் தீமையானதை கொண்டிருந்தாலும், உலகத்தின் கரைகள் நம்மீது படாமல் பார்த்துக்கொள்வது முக்கியமானதாக உள்ளது.

“அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்” என்று I யோவான் 4:13ல் வாசிக்கலாம். தேவனிடம் நிலைத்திருக்க அவர் தம்முடைய ஆவியை நமக்கு தருகிறார். “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.” என்பதாக ரோமர் 8:9ல் பவுல் கூறுகிறார்.

தேவன் நமக்கு தந்தருள்வது கிறிஸ்துவின் ஆவி. அது என்ன கிறிஸ்துவின் ஆவி என்று நினைக்கலாம். இயேசு இந்த உலகத்தில் நம்மத்தியில் உலாவி கொண்டிருக்கும்போது, அவர் நன்மை செய்கிறவராகவே சுற்றித்திர்ந்தார் (அப்போஸ்தலர் 10:38) என்பதாக அப்போஸ்தலன் சாட்சிக்கொடுக்கிறான். அவர் ஒருவருக்காயினும் தீங்கு செய்யவில்லை, நற்கிரியைகளையே வெளிப்படுத்தினார். நன்மையானதையே செய்தார். நற்குணங்களையே மற்றவர்களுக்கு போதித்தார்.

நம்மை உண்டாக்கின தேவன் நற்குணங்களை கொண்டவராக இருக்கிறபடியால், அவருடைய ஆவியை பெற்ற நாம், நற்குணங்களை கொண்டவர்களாயிருக்கவேண்டும். லூக்கா 6:27 ல் இயேசு சொல்கிறார், “பகைக்கிறவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்” என்பதாக.

அப்படி இந்த பொல்லாத உலகிலே நற்குணங்களுடன் வாழ முடியவில்லை என்று ஏங்குகிறீர்களா, இதோ தேவனிடம் கேட்டால், அதற்குண்டான சூழ்நிலைகளை அமைத்துத் தருவார். நாம் எதை விரும்புகிறோமோ அதை தர அவர் வல்லவராயிருக்கிறார். தேவனை நோக்கி, “தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.” என்று சங்கீதக்காரன் சங்கீதம் 119:68 ல் கெஞ்சுகிறான். அதே போல் நாமும் மன்றாடி, தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் அந்த நற்குணங்களை வெளிப்படுத்துவோம்!

Advertisements

4 thoughts on “நற்குணம்

  1. Pretty nice post. I just stumbled upon your blog and wished to say that
    I have truly enjoyed browsing your blog posts.
    In any case I’ll be subscribing to your feed and I hope you write again very soon!

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s