Posted in Bible, Thoughts

ஜெபம்

நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்

II சாமுவேல் 12:13

தாவீது, உரியாவின் மனைவியை தன் மனைவியாக எடுத்துக்கொண்டு, உரியாவையும் கொலை செய்து பத்துக் கட்டளைகளை மீறினான். அதை உணர்த்தும் வகையில், தேவன் நாத்தான் தீர்க்கதரிசியை தாவீதினிடத்தில் அனுப்புகிறார். அதை கேட்டவுடன், தாவீது உணர்வடைந்து, “நான் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தேன்” என்று ஒப்புக்கொள்கிறான். அவன் தன் பாவத்தை அறிக்கையிட்டதும், தேவன், “நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” என்று கூறுகிறார்.

“பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23) என்று வேதம் சொல்கிறது. இப்படி இருக்க, தாவீது செய்த பாவத்திற்கு கட்டாயம் அவனுக்கு மரணம் கிடைத்திருக்க வேண்டும்; நியாயப்பிரமாணத்தின்படி அவன் கல் எறிந்து கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏதோவொரு காரணத்தினால் தேவன் அவன் பாவத்தை அறிக்கை செய்ததும் சாகாதபடி காக்கிறார். அது என்ன?

சங்கீதம் 55:17ல், தாவீது, “அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்” என்று கூறுகிறான். அவன் ஒவ்வொரு நாளும், மூன்று வேளை தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகிறவனாக காணப்படுகிறான். எந்நேரமும் தேவனை தியானிக்கிறவனாக இருக்கிறான். இருப்பினும் தான் மாமிசத்தில் செயல்ப்பட்டிருந்து காரியத்தினால், தேவனிடத்தில் பாவ மன்னிப்பு கேட்டதும், தேவன், அவன் மேல் இரக்கம் கொள்ள சித்தமுள்ளவாராய், அவனை மரணத்திற்கு தப்புவிக்கிறார்.

ஆக, தாவீது தேவனுக்குகந்த சுகந்த வாசனையான ஜெபம் பண்ணுகிறவனாயிருந்ததால், தேவன் அவனுக்கு இரங்கினார்.

அதுமாத்திரமல்ல, தானியேல், தனக்கு விரோதமாக, தன் ஜெபத்திற்கு விரோதமாக பிரதானிகளாலும் தேசாதிபதிகளாலும் தயார் செய்யப்பட்ட பத்திரத்தில் இராஜா கையெழுத்திட்டிருந்தாலும், தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும், தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான். இந்த சூழ்நிலையில், இராஜாவின் ஆணைப்படி, அவனை சிங்கக்கெபியிலே போடப்பட்டிருந்தாலும், தானியேலுடைய ஜெபத்தின் நிமித்தம், தேவன் தம் தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை கட்டினார். அதுவே, திட்டம் தீட்டினவர்களின் சூழ்ச்சியை அறிந்த இராஜா, அவர்களை சிங்கத்தின் கெபியிலே போட்ட பொழுது, அதே சிங்கங்கள் அவர்களை பட்சித்துப்போட்டது.

மேலும், எசேக்கிய இராஜாவும் வியாதிப்பட்டு மரணத்திற்கு ஏதுவாயிருந்தபொழுது, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணின பொழுது, அவனுடைய நாட்களில் பதினைந்து வருடத்தை தேவன் கூட்டிக்கொடுத்தார். (ஏசாயா 38:1-6)

இப்படியாக தேவன் தன்னை நோக்கி ஜெபம் பண்ணுகிறவர்கள் மீது இரக்கமுள்ளவராக இருக்கிறார். அத்துடன் நாம் அவரை நோக்கி ஜெபம் பண்ணுகிற விதத்தையும் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்.

நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது:

“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்” 

என்பதே. (மத்தேயு 6:9-13)

நாம் தாவீதைப்போல மூன்று வேளையும் தேவனை நோக்கி தியானம் பண்ணுவோம். தானியேலை போல எந்த சூழ்நிலையிலும், எந்த தடைகள் இருந்தாலும், நம்மை உண்டாக்கின தேவனை நோக்கி முழங்கால்படியிட்டு ஸ்தோத்தரித்து ஜெபம் பண்ணக்கடவோம். தேவன் தாழ்மையான, உண்மையான, நீதியான ஜெபத்தை நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

[Extracted and reproduced in my own view from the message delivered by Pr. A. Joseph Stephen, The Church of Bethania]

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s