Posted in Bible, Verse Explanation

மூன்று வேளை ஆயினும் அது ஒரே நேரம்

அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள். வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 17:34-36

மனுஷகுமாரன் வெளிப்படும் நாளில் நடக்கவிருக்கும் காரியங்களை இயேசு தன் சீஷர்களிடத்தில் கூறுகின்ற பொழுது, இப்படி மூன்று காரியங்களை குறிப்பிடுகிறார்.

[For English version, check this]

முதலாவது, படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் வேளை – இரவு பொழுது.

இரண்டாவது, திரிகை திரிக்கிற வேளை – மாலை பொழுதாக இருக்கலாம் – மாவு அறைக்கும் வேளை.

மூன்றாவது, வயலில் இருக்கிற வேளை – காலை பொழுதாக இருக்கலாம் – வயலில் வேலை செய்யும் வேளை.

இப்படி மூன்று வேளையில் நடக்கும்  மூன்று வேலைகளை இயேசு குறிப்பிடுகிறார். இதிலிருந்து நமக்கு புரிய வருகிறதாவது:

உலகத்தில் ஒரு நாட்டில் வாழும் ஒருவருக்கு பகல் என்பது வேறொரு நாட்டில் வாழும் மற்றொருவருக்கு மாலையாகவும், வேறொரு நாட்டில் வாழும் வேறொருவருக்கு இரவாகவும் இருக்கும். ஆகவே மனுஷகுமாரன் வரும் வேளை இந்த பொழுது என்று நாம் அறியோம். ஆயினும் வெளிப்படுத்தின விசேஷம் 1:7ல் கூறியுள்ளப்படி, “மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும்…”, இயேசுவின் வருகையை யாவரும் காண்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட தேசமோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ அவர் தன்னை வெளிப்படுத்த போவதில்லை, மாறாக அகில உலகத்தில் உள்ள சகல ஜாதிகளுக்கும் ஒரே நேரத்தில் அவர் தன்னை வெளிப்படுத்துவார்; அவைகளும் அவரை காணும்.

வருகைக்கு ஆயத்தபடுவோம்!
பிறரை ஆயத்தப்படுத்துவோம்!!


பாஸ்டர் டேவிட் தாமோதரன் கூறிய குறிப்பிலிருந்து…

Advertisements

2 thoughts on “மூன்று வேளை ஆயினும் அது ஒரே நேரம்

    1. அன்பு நண்பர் காவி அவர்களே,

      தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் தர என்னால் முடியும். ஆயினும் நான் தர்க்கம் செய்யவோ, விவாதம் செய்யவோ நான் விரும்பவில்லை, என் ஜீவனுள்ள தேவனும் அதை விரும்பவில்லை.

      “பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?” (https://www.bible.com/bible/339/JOB.15.3)

      தங்களிடம் நான் கூறவிரும்புவது, தங்களுக்காகவும், எனக்காகவுமே இயேசு சிலுவையிலே அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தினார். தாங்கள் பாவ விமோசனம் என்று சொல்லி அங்கும் இங்கும் அலைந்து, தங்களையே துன்புறுத்தி கொள்ள தேவையில்லாமல், அவர் உங்களுக்காக தன் பாவமில்லா விலையேறப்பெற்ற இரத்ததை சிந்தியிருக்கிறார். இதை உணருங்கள்!

      “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது”

      இது வரை வாசித்திருப்பீரானால் நன்று. இயேசுவை பற்றி பேசுவதற்கு முன், கீழுள்ள சில சிறிய தொகுப்புகளை வாசித்து பின்னர் மேற்கொண்டு பேசலாம்.

      1. இதுவரை சிந்தித்ததுண்டோ?
      2. நாம் ஏன் பிறந்தோம்?

      ஏதேனும் கேள்விகள் இருந்தால் பதிலளிக்கவும். உங்களுக்கு சமாதானம்!

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s