Posted in Challenge

அரை மணி நேர சவால்

தெரிந்தோ தெரியாமலோ நம்மில் பலர் ஸ்மார்ட்போன்க்கு அடிமையாகியிருக்கிறோம். பலநன்மைகளை அது கொண்டிருந்தாலும், உடலுக்குதீமையை விளைவிக்கக்கூடிய காரியங்கள் அதில் அதிகம். இந்த பதிவு அதை சொல்லி உங்களைபயமுறுத்துவதற்கு அல்ல, மாறாக ஒரு சிறிய விழிப்புணர்வை கொடுப்பதே.

மிக முக்கியமாக, அதிகப்படியாகஸ்மார்ட்போனை பயன்படுத்துவதினால் நாம் நம்மையே தனிமைப்படுத்திக் கொள்கிறோம். நம்மைசுற்றிலும் இருக்கும் சிலருடன் கூட சிறிது நேரத்தை கழிக்க முக்கியத்துவம்கொடுப்பதில்லை. இக்கால தலைமுறையினருக்கு சுபாவ அன்பு இல்லாமல் போய்விட்டது.

இவைகளையெல்லாம் விட இந்த ஸ்மார்ட்போன் நேரடியாக நமது உடலை உச்சந்தலை முதல்உள்ளங்கால் வரை தாக்குகிறது. ஆம்! நாம் உடற்பயிற்சி செய்வதில்லை மாறாக நமதுஉடலுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறோம். நமது கழுத்து, முதுகு தண்டுவடம், நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.நாம் தொடர்ந்து திரையையே பார்த்துக்கொண்டிருப்பதால் அதிலிருந்து வெளிவரும் நீல ஒளிநமது கண்ணின் நரம்புகளை நேரடியாக பாதிக்கிறது. மேலும் சிறிய திரையில் சிறியஎழுத்துக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் ஒரு வித அழுத்தத்தை நாம்நமது கண்களுக்கும் அதினுடைய நுண்ணிய நரம்புகளுக்கும் கொடுக்கிறோம். அதுமட்டுமல்லாதுநெட்வர்க் இணைப்பிலிருந்து வரும் கதிர்வீச்சு நமது மூளை நரம்புகளை சரியாக இயங்கவிடாமல் அதனுடைய சக்தியை குறைக்கிறது.

மறைமுகமாக, மனஆரோக்கியத்தையும் அது பாதிக்கிறது. தூக்கமின்மை, மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதை பற்றி வாசிக்க இந்த இணைப்பை பார்க்கவும்.

இப்பொழுது, ஒரு சிறிய சவால்!

தினமும் காலை எழுந்ததும்,ஸ்மார்ட்போனில் மணி பார்க்காமல், சுவர்கடிகாரத்தில் பார்க்கவேண்டும். அடுத்த 30 நிமிடத்திற்கு நீங்கள் அந்த ஸ்மார்ட்போனைதொடக்கூடாது. மாறாக, மொட்டைமாட்டிக்கோ அல்லது வீட்டிற்கு வெளியே வந்து இயற்கையை ரசித்து, இயற்கை காற்றை கொஞ்சம் சுவாசிக்க வேண்டும். அப்படியே அந்தநாளை திட்டமிடுங்கள். சில கேள்விகளை நீங்களே கேட்டு அதற்கு பதில்சொல்லிக்கொள்ளுங்கள்:

  1. இன்று என்ன சாதிக்கப்போகிறீர்கள்?
  2. இன்று யாரை சந்திக்க போகிறீர்கள்?
  3. அவரிடம் என்ன பேசலாம்?
  4. எப்படி இந்த நாளை பயனுள்ளதாககழிக்கலாம்?
  5. உங்கள் கோபத்தை எப்படிகட்டுப்படுத்தலாம்?

உங்களை சுற்றி யாரேனும் (பெற்றோர், நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள், அல்லது யாரோ தெரிந்தவர்கள்) இருப்பார்களானால், சில நிமிடங்கள் அவர்களோடு முகம் பார்த்து உரையாடுங்கள். அவர்களுடன் ஒரு நல்ல உறவை காலையிலேயே ஏற்படுத்துங்கள். அவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.

இரவு நேரத்தில், படுத்து தூங்கவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு உங்கள்ஸ்மார்ட்போனை தூரத்தில் வைத்துவிடுங்கள். தொலைக்காட்சி இருந்தால் அதையும் அணைத்துவிடுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களுடன் சிறிது நேரம் பேசுங்கள். அன்றைய தினம்நடந்தவற்றை நினைத்துப்பாருங்கள்.

  1. புதிதாக என்ன கற்றுக்கொண்டீர்கள்?
  2. எங்கே தவறினீர்கள்?
  3. எங்கே உங்களை நீங்களேசீர்படுத்திக்கொள்ள வேண்டும்?
  4. எத்தனை நபர்களை இன்று நீங்கள் மகிழ்வித்தீர்கள்?
  5. உங்களுக்கு உதவி செய்த நபர்களைநினைத்துப்பாருங்கள்.

இந்த சவாலுக்கு தயாரா? இன்றே துவங்குங்கள். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு காலையிலும் இரவிலும் ஸ்மார்ட்போனை அரை மணி நேரத்திற்கு தொடக்கூடாது. சவாலை ஏற்கிறீர்கள் என்றால், இப்பொழுதே இந்த பதிவை நீங்கள் மறுபதிவு செய்து உங்களுக்கு தெரிந்த மேலும் 7 நபர்களை குறியுங்கள்.

இந்த பதிவை ஆங்கிலத்தில் வாசியுங்கள் (For English) 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s