Posted in Thoughts

தேவனுடைய சித்தம்

நம்மை உண்டாக்கிய தேவன் ஒரு நோக்கத்துடனும் ஒரு திட்டத்துடனுமே நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார். அனுதினமும் நம்மை போஷிக்கிற தேவன் நம்மை அப்படியே படைத்ததுடன் விட்டுவிடவில்லை. அவரால் படைக்கப்பட்ட நாம், எப்படியாக நாம் இருக்க வேண்டும் என்கிற சித்தமும் அவருக்கு இருக்கவே செய்கிறது. நாம் அவருடைய சித்தத்தை அறிய வேண்டியது அவசியம். அப்பொழுது தான் நாம் தந்தை நமக்கு என்ன வைத்திருக்கிறார் என்பதை உணர முடியும்.

நோயில்லா வாழ்வு

மத்தேயு 8:3 வாசித்தால், ஒரு குஷ்டரோகி இயேசுவிடம் வந்து உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்கும் என்று கேட்கிறான். உடனே இயேசு எனக்கு சித்தமுண்டு நீ சுத்தமாக்கு என்று சொல்லி சுகத்தை தந்தார். அவனுடைய குஷ்டரோக நோயும் மறைந்தது, அவனுடைய பாவமும் மன்னிக்கப்பட்டது.

அப்படி தான் தேவன் விரும்புகிறார். நாம் நோயோடு இருப்பது அவருடைய விருப்பமில்லை. பாவத்தோடு வாழ்வது அவருடைய நோக்கமில்லை. அவரை நோக்கி கூப்பிட்டால் அவர் உடனே நமக்கு செவிக்கொடுக்கிற தேவனாக இருக்கிறார். அவர் சொல்வதெல்லாம், என்னை நோக்கி கூப்பிட்டு என்பது தான்.

புதிய வாழ்வு

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்பதாக ரோமர் 12:2 ல் கூறப்பட்டுள்ளது.

நாம் ஒவ்வொரு நாளும் தேவனுக்குள் மறுரூபமடைய வேண்டும். புதிய சிருஷ்டியாக நம்முடைய பழைய பாவ வாழ்க்கையை தேவனிடம் அறிக்கை செய்து, பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று புதிய படைப்பாக உலகத்துக்கு பிரியமான வாழ்க்கையை வாழாமல் தேவனுக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்.

குணசாலியான வாழ்வு

எபேசியருக்கு எழுதின நிரூபத்தில் 5 ஆம் அதிகாரத்தில் வசனம் 15 முதல் வாசித்துப் பார்த்தால், நாம் மதியற்றவர்களாயிராமல் தேவனுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ள முடியும்.

  1. ஞானமுள்ளவர்களாய் நடத்தல் (15)
  2. ஆவியில் நிறைந்து, தேவனுடன் உறவில் இருத்தல் (18)
  3. ஒருவருக்கொருவர் வசனத்தினால் புத்தி சொல்லி வாழ்தல் (19)
  4. எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் தேவனை ஸ்தோத்திரித்தல் (20)
  5. தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருத்தல் (21)
  6. ஒருவருக்கொருவர் அன்புக்கூறுதல் (25)

இப்படி எல்லாவற்றிலும் ஒரு குணசாலியாக வாழ்வது தேவனுடைய சித்தமாக இருக்கிறது.

எல்லாரும் இராட்சிக்கப்பட

“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்” என்று 1 தீமோத்தேயு 2:4ல் பவுல் கூறுகிறார்.

தேவன் படைத்த சகல ஜனங்களும் வழி தப்பி திரிகிற ஆடாக இராமல் எல்லாரும் அவருடைய நிழலில் வந்து சுகமாய் தங்கியிருக்க விரும்புகிறார். மேலும் அறிய வேண்டிய சத்தியத்தை யாவரும் அறிய வேண்டும் என்ற சித்தம் அதிகம் அவரிடம் உண்டு. அப்படி என்ன சத்தியம்?

“தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே” (1 தீமோத்தேயு 2:5,6) தான் அந்த சத்தியம்.

இதற்காக நாம் என்ன செய்ய சித்தமுள்ளவராக இருக்கிறார்?

“எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்.
நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது”
(1 தீமோத்தேயு 2:1-3 )

இப்பொழுதும் தேவனுடைய சித்தத்தை அறிந்த நாம் அவருடைய விருப்பம் செய்வதே நம்முடைய பிரியமாக வைத்துக்கொள்வோம்.

கர்த்தர் தாமே உங்களுக்கு சமாதானம் அருளி ஆசீர்வதிப்பாராக!

2 thoughts on “தேவனுடைய சித்தம்

  1. Praise God!. Awesome message. God bless you abundantly!!. Reading and meditating the BIBLE will open up our spiritual eyes and brings us more closer to the ways of Christ everyday.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s