Posted in Bible, Thoughts

இயேசுவை மற்றவர்களுக்கு அறிவித்தல்

மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன் எனப்பதாக இயேசு மத்தேயு 10:32ல் சொல்கிறார்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் செய்யும் தவறுக்கு உடனடியான நியாயத்தீர்ப்பு, ஆனால் இயேசு வந்த பின், நமக்காக பிதாவினிடத்தில் சிலவையில் சிந்தின தம்முடைய இரத்தத்தை காண்பித்து பரிந்து பேசுகிறவாராயிருக்கிறார். அப்பொழுது, இயேசு நம்மை குறித்து பிதாவினிடத்தில் அறிக்கை பண்ண வேண்டுமானால், நம்மை பார்த்து இயேசு சொல்கிற காரியம், மனுஷனுக்கு முன்பாக என்னை அறிக்கை பண்ணு என்பதாக.

ஏன் அறிக்கை செய்ய வேண்டும்?

ஏசாயா 43:12ல் தேவன், நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று சொல்கிறார். அப்பொழுது இயேசுவே தேவன் என்பதற்கு நீங்களும் நானுமே இவ்வுலகத்தில் சாட்சிகள்.

மாற்கு 5 ஆம் அதிகாரத்தில், இயேசு ஒரு பிசாசு பிடித்த மனிதனை காண செல்கிறார். அவன் லேகியோன் ஆவான், மனித எண்ணமே இல்லாத அளவில் அவன் பாதிக்கப்பட்டு, தன்னையே சேதப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை குறித்து அந்த அதிகாரத்தில் நாம் நன்கு வாசிக்கலாம். அவனை அந்த ஊர் ஜனங்கள் ஊருக்கு வெளியே கல்லறையில் கிடக்கப்பண்ணினார்கள். அவனிடத்தில் இருந்த பிசாசுகளை இயேசு துரத்தி ஒரு மனிதனாக மாற்றியதை கண்ட அவ்வூரார், இயேசுவை கண்டு பயந்தனர். அவரை மேற்கொண்டு அவ்வூருக்குள் அனுமதிக்கவில்லை, ஆகையால் இயேசு அவ்விடம் விட்டு புறப்பட்ட நேர்ந்தது.

அப்பொழுது, அந்த குணமாக்கப்பட்ட மனிதன் இயேசுவோடு வருவதற்கு உத்தரவு கேட்கிறான். ஆனால் இயேசுவோ அவனை அவனுடைய வீட்டாரிடத்திற்கு சென்று அவனுக்கு கர்த்தர் இரங்கி தனக்கு செய்ததை அறிவிக்க கட்டளையிட்டார். அந்த மனிதன் சற்றாயினும் யோசிக்காமல், அந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அந்த நபர்களிடம் இயேசுவின் நற்செய்தியை சொல்லி பிரசித்தம் பண்ணினான் (மாற்கு 5:19,20)

இப்பொழுதும் சகோதரனே சகோதரியே, இயேசு நமக்கு செய்த அற்புதத்தை நாமும் இயசுவை அறியாத நபர்களிடம், இயேசுவை தள்ளுகிற அந்த மனிதர்களிடம் போய் அறிவிக்கவேண்டும் என்று கர்த்தர் அழைக்கிறார்.

அறிவிப்பதால் எனக்கு நஷ்டம் வந்தால்?

ஒருவேளை நீங்கள் யோசித்து கொண்டிருக்கலாம், நான் இருக்கும் நண்பர்கள் வட்டத்தில் ஒரு நல்ல உறவு உள்ளது, நான் இயேசுவை பற்றி அறிவித்தால், என்னை அவர்கள் தள்ளிவிடுவார்களே, என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்களே… என் குடும்ப உறுப்பினர்கள் நான் இயேசுவை பற்றி பேசினால், என்னுடன் அவர்களுக்கு இருக்கிற உறவை துண்டித்து கொள்வார்களோ… அல்லது நான் வேலை செய்கிற இடத்தில், இயேசுவை பற்றி பேசினால் வேலையை விட்டு தூக்கிவிடுவார்களே என்று யோசிக்கிறீர்களா?

இயேசு சொல்கிறார், “தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்” என்பதாக (மத்தேயு 10:39).

எஸ்தர் என்னும் ஒரு ராணியை பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. அவள் ஒரு சாதாரண அனாதையான யூதப் பெண், அடிமையாக வேற்று தேசத்தில் கிடந்து, கர்த்தர் சூழ்நிலைகளை உருவாக்கி, ஒரு பட்டத்து இராணியாக மாற்றுகிறார். இந்த கட்டத்தில் அவளுடைய மக்களான யூதர்களை அழிக்க திட்டம் தீட்டப்படுகிறது. அப்பொழுது, அவளை வளர்த்த வளர்ப்பு தந்தை இந்த காரியத்தை குறித்து இராஜாவிடம் பேச வற்புறுத்துகிறார்.

ஆனால் அவளோ, இராஜாவினுடைய சட்டத்திட்டங்களுக்கு பயந்து செல்வதற்கு நடுங்குகிறாள். ஏனெனில், ஒருவன் அழைக்கப்படாமல் இராஜாவின் முன் செல்ல கூடாது என்பது அவனுடைய சட்டம். அதை கேட்ட வளர்ப்பு தந்தை, அவளை நோக்கி, “நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்?” என்று கடிந்து கொள்கிறான். உடனே எஸ்தர் சொல்லுக்கு கீழ்படிந்து, உபவாசம் கூறுகிறாள். ஜெபித்து இராஜாவின் முன் தைரியமாக சென்று, காரியங்களை கச்சிதமாக முடிக்க தேவன் உதவுகிறார்.

நீங்களும் ஒருவேளை கண்களுக்கு முன்பாக அநியாயங்களை பார்க்கலாம், மக்கள் படும் பிரச்சனையை பார்க்கலாம், தீரவில்லாமல் அலைகிற கூட்டத்தாரை பார்க்கலாம், பார்த்து கொண்டு சும்மா இருப்பதற்காக தேவன் உன்னை அழைக்கவில்லை, உனக்கு அற்புதம் செய்யவில்லை. விடுதலை இல்லாமல் தவிக்கிற ஜனங்களுக்கு என்னை பற்றி அறிமுகம் செய், அவர்கள் என்னை நோக்கி கூப்பிடுவார்கள், நான் அவர்களுக்கு இரங்கி, அவர்களை விடுவிப்பேன் என்று சொல்கிறார்.

அமைதாலாயிராதே,
இயேசுவே, என்னுடைய நாவின் கட்டுக்களை அவிழ்த்துவிடும், உம்மை பற்றி நான் அறிந்திருப்பதை மற்றவர்களுக்கு அறிவிக்க உதவி செய்யும். எனக்காக உம் பாவமில்லா இரத்தம் சிந்தி, சிலுவையில் மரித்த உமக்காக நான் ஜீவனையும் இழக்க தயாராக இருக்கிறேன், இதோ அடியேன், என்னை பயன்படுத்தும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s