Posted in Bible, Thoughts

சாத்தானின் தந்திரங்களும் அவனை எதிர்கொள்ளுதலும்

சாத்தான் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான் என்பதாக இயேசு பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷத்தில் 8வது அதிகாரத்தில் கூறியுள்ளார்.

வேதாகமத்தில் நாம் வாசிக்கும்பொழுது அவன் ஆதி மனிதனிடம் இடைப்பட்டது முதல் இப்பொழுது நம்முடன் இடைப்படுகிற வரை, அவனுடைய குணாதிசயங்கள் மாறுபடவில்லை.

சாத்தான் எப்பொழுதும் தேவனுடைய உத்தரவை பெற்றே நம்மிடம் வருவான்

யோபுவை தொடும் பொழுதும் சரி, பின்னர் அப்போஸ்தலர்களை தாக்கும்போதும் சரி, அவன் தேவனுடைய உத்தரவை பெற்று தான் வருகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாசிக்க: யோபு 1, 2 ; லூக்கா 22:31

சாத்தான் தேவனுடைய வார்த்தையை கொண்டே பேசுவான்

தோட்டத்தில் ஏவாளிடமும் சரி, இயேசு உபவாசிக்கும் பொழுதும் சரி, அவன் தேவன் கொடுத்த வார்த்தை அல்லது வசனத்தை வைத்தே வஞ்சகமாய் நம்மிடம் எதிர்கொள்ளுவான்.

வாசிக்க: ஆதியாகமம் 3:1-5; மத்தேயு 4:1-11

சாத்தான் நமக்கு தேவையில்லாத ஆசையை தூண்டுவான்

தோட்டத்தில் ஏவாளிடம் அவன் பேசும்பொழுதும் சரி, தாவீதை கணக்கெடுக்க தூண்டும் பொழுதும் சரி, யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்கு நம்முடைய இராட்சகரை காட்டி கொடுக்க செய்ததும் சரி, அவன் ஒரு வித இச்சையையே தூண்டுகிறான். நமக்குள் நமக்கு கிடைக்காத, தேவன் அந்த நேரத்தில் நமக்கு அனுமதியாத, தேவையில்லாத காரியத்தை பெற்றுக்கொள்ள தூண்டுவான்.

வாசிக்க: ஆதியாகமம் 3:1-5; 1 நாளாகமம் 21:1; லூக்கா 22:3

சாத்தான் நம்முடைய நோக்கத்தை குறுக்குவழியில் நிறைவேற்ற முயல்வதாக மாயை செய்வான்

தோட்டத்தில் ஆதாம் ஏவாளுக்கு தேவன் தம்முடைய சாயலிலேயே படைத்திருந்தும், அவர்களுக்காக ஏற்ற வேளையில் தருவதற்காக வைத்திருந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் வைத்திருந்தும், தேவர்களை போல ஆவீர்கள் என்று பிற்காலத்தில் நடக்க விருக்கும் தேவன் வைத்திருந்து திட்டத்தை முன்னமே பாவம் செய்து குலைக்க திட்டமிட்டான். அப்படியே இயேசுவும் கூட நமக்காக நகரத்தின் வாசல் வெளியே பாடுபடவும், ஜனங்களுடைய பாவத்திற்காக பலியாகவும், மீண்டும் உயிர்தெழுவதும் தேவனுடைய திட்டம். ஆனால், இதனை முன்னமே அறிந்த சாத்தான், தன்னை பணிந்து கொள்ளும் பொழுது தனக்கு கீழ்படிந்திருக்கும் இந்த இராஜ்ஜியத்தை இயேசுவிற்கு தருவதாக பொய் வாக்களிக்கிறான்.

வாசிக்க: ஆதியாகமம் 3:1-5; மத்தேயு 4:1-11

தேவனை விட்டு பிரிப்பதே அவனுடைய நோக்கம்

சாத்தானின் எல்லா முயற்சிகளிலும் அவன் எதிர்ப்பார்ப்பது ஒன்றே ஒன்று தான், தேவனுக்காக படைக்கப்பட்ட மனிதர்கள் தான் தள்ளப்பட்ட பரலோகத்திற்கு தேவனோடு இருக்க அனுமதிக்க கூடாது. தேவனுடன் இருக்கும் உறவை அவன் தூண்டிப்பதே ஆகும். இந்த போராட்டத்தில்

  1. ஆதாம் ஏவாள் – தோற்றனர்
  2. யோபு – ஜெயம் பெற்றான்
  3. தாவீது – தோற்று பின்னர், தேவனுடைய இறக்கத்தை பெற்றான்
  4. யூதாஸ் – தோற்றான்
  5. பேதுரு மற்றும் அப்போஸ்தலர்கள் – இயேசுவே அவர்களுடைய விசுவாசம் ஒழியாதபடி வேண்டிக்கொண்டார்

இந்த போராட்டத்தில் இயேசு சாத்தானை எதிர்கொண்ட விதத்தை பார்த்தால், நாமும் அவனை எளிதில் வென்றுவிட முடியும். (வாசிக்க: மத்தேயு 4:1-11; லூக்கா 4:1-12)

  1. இயேசு அவனிடத்தில் எந்த வீண் பேச்சும் பேசவில்லை, தேவனுடைய வசனத்தை கொண்டே எதிர்கொண்டார்.
  2. பெருமைக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.
  3. தனக்கு அதிகாரம் உண்டு என்று அதை பயன்படுத்தவில்லை, தேவனை பரீட்சை பார்க்க இடமளிக்கவில்லை.
  4. குறுக்கு வழியில் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முயலவில்லை, தனக்கு சிலுவை பாதைத்தான் அனுமதித்திருந்தாலும் அதை நமக்காக எதிர்கொள்ள தயாரானார்.
  5. தேவனோடு அவர் இணைந்திருந்தார். அவர் முன்னமே பரிசுத்த ஆவியை பெற்றிருந்தார் என்பது குறிப்படத்தக்காது. (மத்தேயு 3:16 ; லூக்கா 3:22)

இதை வாசிக்கும் சகோதரனே சகோதரியே, பிசாசை துரத்த தேவன் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார் (மத்தேயு 10:8), நாம் தான் தேவனுக்கு கீழ்படிந்திருந்து, அவனை எதிர்க்கவேண்டும் (யாக்கோபு 4:7). சாத்தனுடன் நமக்கனைவருக்கும் போராட்டமுண்டு, நாம் ஆயத்தத்தோடு தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை நாம் தரித்துக்கொள்ள வேண்டும் (எபேசியர் 6:11). நாம் பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தை பெற்றால் தான் அவனை எளிதில் ஜெயம் பெற முடியும். அவனுக்கு எள்ளளவும் இடங்கொடாமல், இடைவிடாமல் ஜெபம் பண்ணி விழித்திருக்க வேண்டும் (எபேசியர் 5:27, கொலோசெயர் 4:2)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s