Posted in Bible, Thoughts

குறைவுகளை நிறைவாக்கும் தேவன்

அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்
மத்தேயு 14:18
இயேசு வனாந்திரத்தில் தம்மிடம் சுகத்தை பெற்றுக்கொள்ள வந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜனங்களை சாயங்காலமானபோது, வெறுமனே அனுப்பாதபடிக்கு சீடர்கள் கேட்டதின்படி அவர்களுக்கு உணவு கொடுத்து அனுப்ப சித்தம் கொண்டார். ஆனால் அந்த வனாந்திரத்தில், சீடர்களிடமிருந்ததோ வெறும் 5 அப்பங்களும் 2 மீன்களுமே. வந்திருந்ததோ ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஜனங்கள். சீடர்கள் திகைத்திருக்கக்கூடும்; ஆனால் இயேசுவோ “அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்” என்பதாக கூறுகிறார்.
சீடர்கள் தயங்கவில்லை, உடனே தங்களிடமிருந்த அந்த கொஞ்ச உணவை இயேசுவிடம் கொண்டு வருகின்றனர். மேலும், அவர் அவர்களை புல்லின்மேல் பந்தியிருக்கவும் கட்டளையிடுகிறார். பின்னர் இயேசு, “வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்”. 
இது சற்றே வியப்பாகவே தோன்றும். ஆனால் நாம் ஆராதிக்கும் தேவனோ இயற்கைக்கு அப்பார்ப்பட்ட சர்வ வல்லமையுள்ள தேவன். இயேசு ஆசீர்வதித்து அந்த கொஞ்ச அப்பங்களையும், மீனையும் பெருக செய்தார், அது போதுமானதாக மட்டுமல்ல, மீதமும் எடுக்க வைக்கிறார்.
இப்பொழுதும் ஒரு மிக பெரிய தேவை சந்திக்கப்பட வேண்டியிருக்கிறதே, ஆனால் என்னிடமுள்ளதோ மிகவும் சொர்ப்பமான பணம், இவைகளை கொண்டு நான் எப்படி அத்தனை பெரிய தேவையை சந்திக்கபோகிறேன் என்று சிந்தித்து, கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்களா?
அல்லது, வாழ்க்கையின் ஒரு முக்கிய காரியத்திற்காக முடிவு எடுக்கப்படவேண்டிய நிர்பந்தத்தில், எனக்கு அவைகளை பற்றி சிந்தித்து ஞானமாய் முடிவெடுக்கக்கூடிய அளவிற்கு ஞானம் இல்லையே என்று மனதில் புலம்பி கொண்டிருக்கிறீர்களா?
இதைக்குறித்து இனி நீங்கள் கவலைப்பட தேவையே இல்லை. காரணம், இயேசு உங்களை நோக்கி, “அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்” என்கிறார். எவைகளை? அந்த சொர்ப்பமான பணத்தை, அந்த குறைவான ஞானத்தை. தேவன் அவைகளை ஆசீர்வதித்து தரும்படி கேளுங்கள் அவர் தருவார். அப்பொழுது போதாது என்று நீங்கள் எண்ணின காரியம், எப்படி ஆயிற்று என்று வியக்க வைக்கும்.
இந்த சூழ்நிலைகளிளெல்லாம், தேவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது நம்மிடத்தில் உள்ள அந்த சொர்ப்பாமான காரியமும், அவர் மீது விசுவாசமுமே! அவர் எல்லாவற்றையும் செய்து முடிக்க வல்லவராயிருக்கிறார்.
அநேக முறை என் வாழ்கையிலும் இப்படிபட்ட சூழ்நிலைகள் வந்துள்ளன. படிக்கின்ற காலத்தில், தேர்வக்காக என்னால் முடிந்த வரை முயற்சி செய்து படிப்பேன். ஆனால் குறைந்த ஞானம், ஞாபக மறதி, சரீர பெலவீனம் என எல்லாவற்றிற்கும் மத்தியில், தேவனிடத்தில் அற்பணித்து, தேவனே என்னால் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியவில்லை, நான் வெட்கப்பட்டு போகாமல் காத்திடும் என்று சொல்லிவிட்டு செல்வேன்.
தேர்வு எழுதும்பொழுது பல கேள்விகளுக்கு சரியான விடை எழுதியிருக்க மாட்டேன். தேவன் கைவிட்டாரோ என்று எண்ணின நேரமும் உண்டு, ஆனாலும் ஒரு சிறிய விசுவாசமும் கூடவே இருக்கும், தேவன் என்னை வெட்கப்பட விடமாட்டார் என்பதாக. முடிவுகள் அறிவிக்கப்படும் வேளைகளில் நான் எதிர்ப்பாராத மதிப்பெண்களையே தந்து உயர்த்துவார். அது எப்படி ஆயிற்று என்று என்னால் நம்பவே முடியாது. ஆனால் தேவனால் அது ஆயிற்று என்றே சொல்லலாம்.
இப்பொழுதும், மென்பொருள் (software) அல்லது செயலி (application) வடிவமைக்கும்பொழுதும், அநேக தரம் சிக்கலான தர்க்கங்கள் (complex logic) வரும்பொழுதெல்லாம், என்னால் அதற்கு மேல் எப்படி வடிவமைப்பது, அதை எப்படியாக முடிப்பது என்று மனதில் பல மணி நேரம் போராடி கொண்டிருப்பேன். தூங்கி பார்ப்பேன், வேற வேலைகள் செய்துவிட்டு வந்து பார்ப்பேன், ஆனால் அதற்கு எப்படி விடை கண்டுபிடிப்பது என்பது எனக்கு தெரியாது. இறுதியில், தேவனிடத்தில் கூறிவிட்டு, ஜெபத்தில் பாடல் பாடிக்கொண்டிருப்பேன், அழகாக தேவன் அதற்கு விடையளிப்பார். படிமுறைகளோடு அதை செய்வதற்கு வடிவம் தருவார்.
ஒரே மூளை தான், ஆனால், தேவனிடத்தில் ஒப்படைத்து, அவரையே நம்பி, “தேவனே, எனக்கு இருக்கின்ற இந்த கொஞ்ச ஞானத்தினால் இந்த தர்க்கத்திற்கு என்னால் வடிவமைப்பு கொடுக்க முடியலப்பா, இது மிகவும் குழப்புவதாக உள்ளது, நீர் இதை செய்து முடிக்க ஞானத்தை தாரும்” என்று ஒப்படைத்து விட்டு, தேவனிடத்தில் விசுவாசத்தோடு காத்திருப்பேன். மீதியானவற்றை அவரே பார்த்துக்கொள்வார்.
ஆகவே அன்பான சகோதர சகோதரிகளே, நீங்களும் ஏதோவொரு பெரிதான காரியத்திற்கு எனக்கிருக்கும் இந்த கொஞ்சத்தை கொண்டு சாதிக்க முடியவில்லையே  என்று துவண்டு போய் இருக்கிறீர்களா? இதோ, தேவன் அவைகளை அவரிடத்தில் கொண்டு வர சொல்கிறார். விசுவாசத்தோடு அவருடைய சீடர்களை போல கொண்டுபோங்கள், அவர் உங்களுக்கு தேவைக்கும் அதிகமாக சந்திக்க  வல்லவராக இருக்கிறார்.
Posted in Verse Explanation

Receiving God’s grace and mercy

I will be gracious to whom I will be gracious, and will show mercy on whom I will show mercy.
Exodus 33:19

Once we read this verse, we would doubt if God shows partiality or favoritism. But when we read Acts 10:34, Peter says, “God shows no partiality“. It appears contradictory when read superficially. That’s why God wants us to explore such verses; if asked, he reveals.

Continue reading “Receiving God’s grace and mercy”

Posted in Verse Explanation

தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற்றுக்கொள்ளுதல்

எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன்
யாத்திராகமம் 33:19

இந்த வசனத்தை வாசித்ததும் நமக்கு தேவன் பட்சபாதமுள்ளவரோ என்று தோன்றும். ஆம், அப்படி தானே தேவன் சொல்கிறார், “எனக்கு விருப்பமாயிருப்பவனிடம் இரக்கமாகவும், தயவாகவும் இருப்பேன்” என்பதாக! ஆனால் அப்போஸ்தலர் நடபடிகளில் (10:34) வாசிக்கும்போது, பேதுரு சொல்கிறார், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்று. Continue reading “தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற்றுக்கொள்ளுதல்”

Posted in Verse Explanation

அன்பு

உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக

மத்தேயு 22:39

அன்பு இல்லாவிட்டால் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என்று பவுல் கூறுகிறான். தேவன் துவக்கமுதல் நமக்கு கற்பிப்பதும், நம்மிடத்திலிருந்து எதிர்பார்ப்பதும் அன்பைத்தான். ஆவியின் முதற்கனியும் அதுவே ஆகும்.

Continue reading “அன்பு”